வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (17:09 IST)

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் டான்…. சூர்யா பட ரிலிஸ் தான் காரணமா?

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் டான் திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்துக்கு மிகப்பெரிய அளவில் போட்டி இருப்பதால் அந்த படம் ரிலிஸ் ஆகி இரண்டு வாரம் கழித்து பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.