1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (10:12 IST)

காதலர் தினத்துக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் டான்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் டான் திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.