புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:29 IST)

டான் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்? விதியை மீறிய படக்குழு!

டான் திரைப்பட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவும் வகையில் அதிக அளவிலான ஆட்கள் கூடக் காரணமாக இருந்ததால் டான் படக்குழுவினருக்கு வருவாய்த் துறையினர் 19400 ரூபாய் அபராதம் விதித்ததோடு தற்போது அப்படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த அபராதத்துக்கு உண்மையானக் காரணம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் 500 பேரை கூட்டி படப்பிடிப்பு நடத்தியுள்ளதாம். அதிலும் பாதி பேர் உள்ளூர் காரராம். இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா பரவல் அதிகமாக வாய்ப்புள்ளதாக படக்குழுவினருக்கு எதிராக கூடினராம். அதனால்தான் படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.