செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (22:39 IST)

அந்த தைரியம் உங்களுக்கு இருக்கா? திமுக பிரமுகரிடம் குஷ்பு கேள்வி !!

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய நடிகை குஷ்பு,  பாஜகவின் இணைந்தார். தற்போது, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகி பாஜக கட்சிக்கு சென்றது குறித்து, திமுக பிரமுகர் அருணன் கதிரேசன் தனது  டுவிட்டர் பக்கத்தில், காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு தாவ உங்களை தூண்டிவிட்ட இடைத்தரகர் யாரு தாயி எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில்,  எங்களை யாரும் தூண்டிவிடவில்லை; மக்கள் எந்தக் கட்சியோ அங்கு இருந்தால் போதும்..நீங்கள் இதே கேள்வியை நான் திமுகவிலிருந்து காங்கிரஸுக்குச் சென்றதற்காக கேட்பீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு இருக்கா? எனக் கேட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.