செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:51 IST)

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாடகர் – இந்தியனே இல்லை என பொய்யைப் பரப்பிய நபர்கள்!

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகர் தில்ஜித் தோஸாஞ் இந்தியனே இல்லை என பொய்யப் பரப்ப ஆரம்பித்துள்ளனர் சிலர்.

டெல்லியில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் 6 கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.  இந்த போராட்டத்துக்கு பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் தில்ஜித் தோஸாஞ் ஆதரவு தெரிவித்து நன்கொடையும் அளித்தார்.

அதையடுத்து மத்திய அரசுக்கு ஆதரவான சிலர் அவர் இந்தியனே இல்லை என்று சமூகவலைதளங்களில் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்தன. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக அவர் ‘சென்ற ஆண்டு வருமான வரிக் கட்டியபோது வருமான வரித்துறை தனக்கு இந்தியன் என அளித்த சான்றிதழை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.