செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (07:52 IST)

போராட்டத்தின் நடுவிலும் புத்தாண்டு கொண்டாட்டம்: மெழுகுவர்த்தி ஏந்திய விவசாயிகள்!

போராட்டத்தின் நடுவிலும் புத்தாண்டு கொண்டாட்டம்
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 37வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர் 
 
பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநில விவசாயிகளின் இந்த போராட்டம் உலகின் கவனத்தை கவர்ந்ததை எடுத்து விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் இன்று 37வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் புத்தாண்டை கொண்டாடினர். இன்று 2021ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறந்ததை அடுத்து மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி அவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்
 
போராட்டம் செய்துவரும் ஒட்டுமொத்த விவசாயிகள் போராட்ட களத்திலேயே புத்தாண்டை கொண்டாடிய குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று நடைபெற இருப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என்று தாங்கள் கருதுவதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கடும் குளிரிலும் போராடி வரும் விவசாயிகள் சாலையிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி புத்தாண்டு கொண்டாடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது