1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:36 IST)

காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு.! விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய ஜெயம் ரவி.!!

Jayam Ravi
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத் தாக்கல் செய்துள்ளார்.  
 
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 
 
தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ஜெயம் ரவி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.