வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:09 IST)

தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள ஜெயம் ரவி!

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தின் இயக்குனர் தான் இயக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களில் வரும்படி இயக்குவார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் படுதோல்வி அடைந்து கேலிகளையும் எதிர்கொண்டது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது. இந்த படம் வந்த போது நல்ல கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படமாக மிருதன் 2 படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.