வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:18 IST)

நுரையீரல் தொற்று பாதிப்பு.! வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்.!!

Velliyan
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக் குறைவால் காலமானார்.
 
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்தவர் வெள்ளையன். இவருக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
 
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.  வெள்ளையனின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
 
மேலும் வெள்ளையன்  மறைவையொட்டி வணிக சங்கங்களின் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.