செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (08:22 IST)

ரஹ்மானை நடிக்க சம்மதிக்க வைத்தது எப்படி? இயக்குனர் பதில்!

மோகன்லால் நடிக்கும் ஆராட்டு திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான், இப்போது ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துவிட்டு தமிழ் மற்றும் இந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் அவர் இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிகராக களமிறங்க உள்ளாராம். அதுவும் முழுமையான நடிகர் என சொல்லப்படும் மோகன் லால் படத்தில்.

மோகன் லால் நடிப்பில் ஆராட்டு என்ற ஆக்‌ஷன் மசாலா திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ரஹ்மான் நடித்துள்ளார். இது சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் எப்படி ரஹ்மானை நடிக்க சம்மதிக்க வைத்தோம் என்பதைக் கூறியுள்ளார்.

அதில் ‘ரஹ்மான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைத்தோம். ஆனால் மோகன்லால்தான் முயற்சி செய்து பார்ப்போம் எனக் கூறினார். ரஹ்மானிடம் கூறியதும் ‘அவர் எனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை’ என சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் விடாமல் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். படத்தின் முழு ஸ்க்ரிப்டை அவருக்கு அனுப்பினோம். அந்த கதாபாத்திரம் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணரவைத்தோம். பின்னர் நடிக்க சம்மதித்தார்’ எனக் கூறியுள்ளார்.