பிரபல இயக்குனரின் மகன் பைக் விபத்தில் மரணம்!

mahendran| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (11:04 IST)

கன்னட இயக்குனர் சூர்யோதயா பெரம்பல்லியின் மகன் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கன்னடம் மற்றும் துளு மொழி படங்களை இயக்கி வருபவர் சூர்யோதயா பெரம்பல்லி.
அவருக்கு 20 வயதில் மயூர் என்ற மகன் இருந்தார். அவர் பைக் டேங்கர் லாரி மீது மோதி உயிரிழந்துள்ளார். அந்த பைக்கை சூர்யோதயா அவருக்கு புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளார். பைக்கில் மயூர் அழைத்துச் சென்ற சிறுமி காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மயூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். அதிவேகமாக பைக்கை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :