திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (18:34 IST)

கே வி ஆனந்தின் கடைசி திரைக்கதைக்கு இயக்குனர் தேடும் குடும்பம்!

இயக்குனர் கே வி ஆனந்த் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் கடந்த மே மாதம்  மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவர் கடைசியாக எழுதி தயாராக வைத்திருந்த கதையை இயக்க இப்போது அவரின் குடும்பமும், அதை தயாரிக்க இருந்த ஏஜிஎஸ் நிறுவனமும் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.