வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (11:20 IST)

அருவா படத்தின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் ! அறிவித்த பிரபலம்!

நடிகர் சூர்யா நடிக்கும் அருவா படத்தில் தன்னுடைய சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக இயக்குனர் ஹரி அறிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கிய’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளார்.

கொரோனாவால் சினிமா உலகமே முடங்கியுள்ளதால் தங்கள் கைகளில் இருந்த பணத்தை எல்லாம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொண்ட நிலையில் இப்போது அருவா படத்தின் இயக்குனர் ஹரியும் தனது சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.