புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மே 2020 (08:05 IST)

சூர்யாவின் ‘அருவா’ படத்தின் நாயகி இவர்தான்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கிய’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சூர்யா-ஹரி மீண்டும் இணையும் படத்தின் நாயகி குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சூர்யா ஜோடியாக ‘அருவா’ படத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘அடங்கமறு’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் என்பதும், சுந்தர் சி இயக்கி வரும் ‘அரண்மனை 3’ படத்தில் நடித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சூர்யாவுடன் ‘அருவா’ படத்தில் நடிக்கவிருப்பதை நடிகை ராஷிகண்ணா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக சூர்யாவுடன் ராஷிகண்ணா நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதால் ராஷிகண்ணாவுடன் இன்னொரு பிரபல நடிகையும் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.