வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:47 IST)

இயக்குனர் பாரதிராஜாவுக்கு உடல்நலம் பாதிப்பு !

பிரபல இயக்குனர் பாரதிராஜா உடல்  நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

 தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பாரதி ராஜா. இப்படத்திற்குப் பின், நிழல்கள், கைதியின் டைரி,  சிவப்பு ரோஜாக்கள், தாஜ்மஹால், கடல்பூக்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில்,  பாண்டிய நாடு படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார், இதையடுத்து, சமீபத்தில், வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு பாராட்டுகள்குவிந்தது.

இந்த நிலையில்,  சில  நாட்களுக்கு முன் திடீர் மயக்கம் ஏற்பட்ட பாராதி ராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு மஞ்சல் காமாலை அறிகுறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.