தில் ராஜுவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காத தில்ராஜு!
வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காத நிலையில் உதயநிதியை சந்திக்க இருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார்.
விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வருகிறது. அதே நாளில் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆவதால், இரண்டு படங்களுக்கும் சம அளவில் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னைக்கு வந்த அவர் தில் ராஜுவுக்கு இன்னும் உதயநிதி ஸ்டாலின் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி ஏற்றுள்ள அவர் அது சம்மந்தமான பணிகளில் பிஸியாக உள்ளதால் அடுத்த வாரத்தில்தான் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.