புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (15:31 IST)

சன் பிச்சருக்கு கோரிக்கை விடுத்த விக்ரம் மகன்!

சன் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் 'பேட்ட' ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், கார்த்திக் சுப்பராஜுக்கும் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அதாவது , "அன்புக்குரிய சன் பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ், பேட்ட டீசரை ஒரே மொழியில் ரிலீஸ் செய்யும்படி, ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் அந்த டீசர் ட்ரெண்டிங்கில் இருக்கட்டும். 
 
கபாலி டீசருக்குப் பிறகு வேறெந்த தமிழ் சினிமாவும் இதுவரை இந்தியா முழுக்க ட்ரெண்ட் ஆகவில்லை. இந்தி, தெலுங்கு என தனித்தனியாக ரஜினி படங்களின் டீசர்கள் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளன. ஆனால் இந்த முறை தமிழ் மொழியில் வரும் டீசர் இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் ஆக்கிரமிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.