வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (20:01 IST)

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நைசாக நழுவிய தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில், தனுஷிடம் ரஜினிகாந்தின் அரசியல் குறித்து கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் நழுவி சென்றுவிட்டார். ஆம், நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். 
 
அப்போது செய்தியார்கள் அவரிடம் ரஜினி குறித்து கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார். நான் குடும்பத்தோடு சாமி கும்பிட வந்துள்ளேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி பேச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி அவரே உங்களிடம் தெரிவிப்பார் என பதில் அளித்தார். 
 
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.