புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:09 IST)

அசுரனாக களத்தில் வெறிகொண்ட தனுஷ் - சண்டை காட்சி மேக்கிங் வீடியோ!

வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் அசுரன். இந்த படம் ரசிகர்களை தேப்ப தேப்பையாக திரைக்கு வர வைத்து சுமார் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்த அசுரன் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சிவ சுவாமி கதாபத்திரத்தில் தனுஷின் நடிப்பும் அவரது மனைவியாக மஞ்சு வாரியாரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்து. காதல் , பாசம் குடும்பம் , இறப்பு , சாதி கொடுமை, அதிகாரம் , அபகரிப்பு என அத்தனையும் உள்ளடக்கி வெளிவந்த இப்படம் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துவிட்டது.

இந்நிலையில் தற்போது க்ளைமாக்ஸ் காட்சியின் ஸ்டண்ட் சீன் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தியேட்டரில் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்து பார்க்க வைத்த இந்த காட்சி எப்படி உருவாகியுள்ளது என்று பாருங்கள்...