1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (13:30 IST)

ரஜினிகாந்த் மகளின் கோரிக்கையை நிராகரித்த இயக்குனர் மணிரத்தினம்....!

கொரோனா காரணமாக மொத்த உலகமும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் ரசிகர்களுடன் சமூகவலைதளங்களின் மூலம் உரையாடி வருகின்றனர்.

இதையடுத்து மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னத்திடம் ரசிகர்கள் கேட்கவேண்டிய கேள்விகளை தங்களது சுய அறிமுகத்தோடு வீடியோவாக எடுத்து அனுப்பினால் அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என தெரிவித்திருந்தார். அந்த கேள்விகளுக்கும் மணிரத்னம் அளிக்கும் பதில் நேற்று மாலை வெளியானது.

அப்போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் " மணிரத்தினம் அவர்கள் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை முற்றிலுமாக நிராகரித்த மணிரத்தினம், "ஒரு இயக்குனராக படங்களில் நடித்துவிட்டு இயக்க சென்றால், நடிகர்கள் என்னிடம், 'நீங்கள் எப்படி நடிக்கிறீர்கள்? என்று என்னிடமே கேள்வி கேட்பார்கள். அதுவே நான் என்னுடைய வேலையை மட்டும் செய்தால் எனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பிற நடிகர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்கவிடுவேன்."  என மிகவும் புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார் மணிரத்தினம்.