1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (08:45 IST)

தனுஷுடன் ஊட்டியில் லூட்டியடித்த ஷெரின் - சூப்பர் வைரலான புகைப்படம்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.

அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது துள்ளுவதோ இளமை படத்தின் போது தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாகிராமில் "மதர் ஆஃப் த்ரோபேக்" என குறிப்பிட்டு  பதிவிட்டுள்ளார்.  இதனை கண்ட பலரும்... இவர் தான் தனுஷுடன் பவ்யமாக நடித்திருந்த அந்த பெண்ணா? என ஷெரினை அடையாளம்  அடையாளம் கண்டனர். பின்னர் தனுஷ் ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஸர் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mother of all throwbacks