திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (16:08 IST)

இந்தியாவில் மிகப் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் தனுஷ் முதலிடம்!

dhanush 740
இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில்  நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான ஐஎம்டிபியின் இந்தியாவின் மிகப் பிரபலமான  நடிகர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதில்,  நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.  2 வது இடத்தில், ஆர்.ஆர்.ஆர் பட நடிகையும்,  சமீபத்தில் ரன்பீர் கபூரை திருமணம் செய்தவருமான ஆலியா பட் உள்ளார்.  3 வது இடத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும்,  5 வது இடத்தில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜூன் 9 வது இடத்திலும், கேஜிஎஃப் நடிகர் யஷ் 10 வது இடத்தில் உள்ளனர்.

 Edited By Sinoj