உருவாகிறது நெற்றிக்கண் படத்தின் இரண்டாம் பாகம் ! யார் கதாநாயகன் தெரியுமா ?
ரஜினி நடிப்பில் வெற்றி பெற்ற நெற்றிக்கண் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
ரஜினி, சரிகா மற்றும் மேனகா அகியோர் நடிப்பில் 1981 ஆம் வருடம் வெளியானத் திரைப்படம் நெற்றிக்கண். இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி பெண் பித்தனாக நடித்திருந்த கதாபாத்திரம் ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரங்களுள் ஒன்று.
இந்நிலையில் வெளியாகி 39 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.