ஏண்டா முட்டாள்ன்னு புருஃப் பண்றிங்க: ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி

Last Modified செவ்வாய், 21 ஜனவரி 2020 (15:59 IST)
பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசியதாக பெரியார் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த் அவர்கள் ’தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் ஊடகங்கள் மற்றும் கேள்விப்பட்டதை தான் பேசியதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்றும் கூறியிருந்தார்
ரஜினியின் இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, ரஜினிக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். ரஜினி கூறுவது சரியோ தவறோ அது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அவர் தான் கூறிய ஒரு கருத்தில் உறுதியாக உறுதியாக உள்ளார். பயமில்லாமல் இருக்கும் அவரது நிலையை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்திருந்தார்

குஷ்பு இருக்கும் காங்கிரஸ் கட்சி, ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஷ்பு மட்டும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு சில ரஜினியுடன் குஷ்பு ‘தலைவர் 168’ படத்தில் நடிப்பதால் தான் ரஜினிக்கு ஆதரவாக அவர் பேசுவதாக குறிப்பிட்டிருந்தனர்

இந்த நிலையில் இது குறித்து பதில் அளித்த குஷ்பு, ’அட லூசு பசங்களா, ரஜினி சார் கூட 28 வருசத்துக்கு முன்னரே ஏற்கனவே நடிச்சு முடிச்சிட்டேன். எனக்கு இது புதுசா இல்ல. ஏன்டா முட்டாள்ன்னு உறுதி செய்றீங்க’என்று பதிலளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :