வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (21:31 IST)

தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைக்கும் தனுஷ்??

தனுஷ் ஷூட்டிங்கிற்கு தினமும் வரும்போது  உடன் ஒரு ஹேர் டிரஸரையும்  அழைத்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், இவர் தற்போது குபேரா, இளையராஜாவின் பயோபிக், தனது 50 வது படமாக ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில்,  நடிகர் தனுஷ் பற்றி சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகிறது.
 

தனுஷ் ஷூட்டிங்கிற்கு தினமும் வரும்போது  உடன் ஒரு ஹேர் டிரஸரையும்  அழைத்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இவர் எதற்கு தினமும் ஹேர் டிரஸரை கூட்டி வருகிறார் என யாரும் அவரிடம் கேள்வி எழுப்ப முடியவில்லையாம்.
 
இந்த ஹேர் டிரஸரை உடன் கூட்டி வருவதால் என்ன சர்ச்சை எனக் கேட்டால்? தினமும் அந்த ஹேர் டிரஸருக்கு ரூ.25,000 பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அவர் முடி வெட்டினாலும், வெட்டாவிட்டாலும் ரூ.25000 பணம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதால் தயாரிப்பாளர் இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் புலம்பி வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இதற்கு விமர்சனங்களும் குவிந்து வருகிறது.