ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (18:44 IST)

விஜய் பட நடிகையை பாராட்டிய திரிப்தி டிம்ரி

triptii dimri
பிரியங்கா சோப்ரா தைரியமுடன் வேறு நாட்டிற்குச் சென்று தன் பணியை தொடர வேண்டும் என்று பிரபல  நடிகை திர்ப்தி டிம்ரி தெரிவித்துள்ளார்.
 
இந்தி சினிமாவின் பிரபல  நடிகை திர்ப்தி டிம்ரி. இவர் நடிப்பில்   கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான போஸ்டர் பாய்ஸ் படம் வெற்றி பெற்றது.  அதன்பின்னர் லைலா மஜ்னு படத்தில் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதேபோல் காலா, அன்விதா தத்தின் புல்புல் என்ற பீரியட் படத்திலும் சிறப்பாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
 
இவர் சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் சீனியர் நடிகையான பிரியங்கா சோப்ராவை பற்றிப் பேசியுள்ளார்.
 
அதில்,  பிரியங்கா சோப்ரா நடித்த பார்பில் படம் சிறந்த படமாக இருந்தது. அப்படத்தில் அவரை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. நானும் அத்திறனை வளர்க்க வேண்டும் என விரும்புகிறேன்.  நானும் ஒரு புதிய படத்தில் நடித்தில் மக்கள் என்னைப் பார்த்து அது திர்ப்தி இல்லை என்று கூறவேண்டும். அதுதான் எனக்குக் கிடைக்கும் பெரிய பாராட்டு. பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை நகர்த்திச் செல்வது எனக்குப் பிடித்துள்ளது. அவர் தன் சொந்த வாழ்க்கையும் நடிப்பதையும் சம நிலையில் வைக்க வேண்டும். அவர் கஷ்டமான நேரத்தில் நிதானமாக செயல்படுவார். மிகத் திறமை வாய்ந்த அவர்  வேறொரு நாட்டிற்குச் சென்று தன் பணியைத் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பிரியங்கா சோப்ராவிற்கு அமெரிக்காவை சேர்ந்த  நிக் என்ற பாடகருடன் திருமணமாகி குழந்தை உள்ளது.  பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் என்ற படத்தில் நடிகையாக  அறிமுகமானது குறிப்பிடத்தக்கது