செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (17:12 IST)

தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம் !

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள படம் நானே வருவேன். இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நானே வருவேன் படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில்  ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நானே வருவேன் பட ஷீட்டிங் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் – தனுஷ் ஆகிய இருவரும்  ’மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணையவுள்ள நானே வருவேன் படத்தின் பெயரை படக்குழுவினர் மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.