செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:01 IST)

படப்பிடிப்பை ஆரம்பித்து நான்கே நாளில் வந்த அப்டேட் – தனுஷ் ரசிகர்கள் குஷி!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இப்போது தனுஷ் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டரோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜானி மாஸ்டர் ஏற்கனவே புட்ட பொம்மா மற்றும் ரௌடி பேபி ஆகிய பாடல்களுக்கு நடனக் காட்சிகளை வடிவமைத்தவர். இந்நிலையில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘அடுத்த ட்ரண்ட்டிங் பாடலுக்கான பயிற்சியில் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் முதலில் ஒரு பாடலை படமாக்கி முடித்துள்ளனர். இதை சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடன இயக்குனர் ஜானி ’முதல் பாடல் எடுத்து முடிக்கப்பட்டது. காத்திருங்கள் மாஸான நடன அசைவுகள் கொண்ட பாடலுக்கு’ எனக் கூறியுள்ளார்.