1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (16:12 IST)

தனுஷின் ‘மாரி 2’ : இன்று முதல் ஷூட்டிங் தொடக்கம்

தனுஷ் நடித்துவரும் ‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங், இன்று முதல் தொடங்க இருக்கிறது.

 
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 40 சதவீதம் ஷூட்டிங் முடிந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்தால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் மறுபடியும் ஷூட்டிங் தொடங்குகிறது.