வெளியானது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இடையே உள்ள ரொமான்ஸ் பாடல் தான் இந்த பாடல் என்பதும் இந்த பாடலை கபீர் வாசுகி எழுத சீன் ரோல்டன் பாடியுள்ளார். இந்த பாடலை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார்.
தனுஷ், சிவராஜ்குமார், சந்திப் கிசான், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது