திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:48 IST)

மீண்டும் ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹிட் படம்!

தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. அப்போது தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்திருந்த தனுஷுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பின்னர் ரகுவரன் பி டெக் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது 9 ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் தெலுங்கு பேசும் மாநிலங்களில் ரி ரிலீஸ் ஆகவுள்ளது.

சமீபத்தில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் டப்பிங் பதிப்பான சூர்யா S/O கிருஷ்ணன் இதே போல ரிலீஸாகி பெருத்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.