ரஜினியின் ஜெயிலர் படம் பற்றி ட்வீட் செய்த தனுஷ்!
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.
இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனானுமான தனுஷ் ஜெயிலர் படம் பற்றி “இந்த வாரம் ஜெயிலர் வாரம்” என ட்வீட் செய்துள்ளார்.