1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (17:24 IST)

’’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் ! ரசிகர்கள் குஷி

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி ’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடலான பூஜி வெளியாகும் எனதனுஷ்  தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் 40-வது படமான ’’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடல் வரும் தீபாவளி அன்று ரிலீசாகவுள்ளதாக இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வரும்  நவம்பர் 13 ஆம் தேதி ’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடலான புஜ்ஜி வீடியோ வெளியாகும் என தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.