திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (08:58 IST)

பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கையில் ‘800’ படத்தின் ஷூட்டிங்! வெளியான தகவல்கள்

முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான 800 படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் ‘800’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி, அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து தற்போது அந்த படத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படக் கதாநாயகன் ‘தேவ் படேல்’ நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம். பரபரப்பான அரசியல் சூழல்கள் நிலவும் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தைக் கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி இயக்கி வருகிறார்.