டிமாண்டி காலணி ரிலீஸ் எப்போது? வெளியான மேக்கிங் வீடியோ!
தமிழ் சினிமாவில் பேய் படங்களின் வரவு உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.
இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என அறிவித்துள்ளது.