புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (09:40 IST)

கமல்ஹாசனை விட ரஜினிகாந்த்தான் ‘அந்த’ வேடத்துக்கு சிறந்த நடிகர்… டெல்லி கணேஷ் சொன்ன காரணம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எனக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற விளங்கி வந்தவர் டெல்லி கணேஷ். திருநெல்வேலியில் பிறந்த இவர் டெல்லியில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கியங்கிய நாடக உலகில் நுழைந்து நடிகரானார். அதன் பின்னர் பாலச்சந்தர் அவரை ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் அறிமுகப் படுத்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் பல நினைவுகூறத்தக்க படங்களை நடித்துள்ளார். சில நாட்களாக உடல் நலக் குறைவால் தனது 81 ஆவது வயதில் காலமானார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவர் நடித்த காட்சிகள் மற்றும் அவரின் நேர்காணல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ‘ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரில் வில்லன் நடிப்பை வெளிப்படுத்துவதில் யார் சிறந்தவர்?’ எனக் கேட்டபோது டெல்லி கணேஷ் “ரஜினிகாந்த்தான் சிறந்த வில்லன்” எனப் பதிலளித்துள்ளார். ஏன் கமல்கூட ‘ஆளவந்தான்’ போன்ற படங்களில்  வில்லனாக நடித்துள்ளாரே எனக் கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார். ரஜினியை விடக் கமல்ஹாசனோடுதான் டெல்லி கணேஷ் அதிக படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.