1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (21:09 IST)

பிரபாஸுக்கு ஜோடியாகிறார் தீபிகா படுகோனே?

‘பாகுபலி’ புகழ் பிரபாஸுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கலாம் என்கிறார்கள்.
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ‘சாஹு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகிவரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், ஜாக்கி ஷெராப், மந்த்ரா பேடி, நீல்நிதின் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, இன்னொரு ஹிந்திப் படத்திலும் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் நடிக்க ஓகே  சொல்லியிருக்கிறார் பிரபாஸ். ஆனால், சில காரணங்களால் படம் தொடங்கவில்லை.
 
ஆனால், ‘பாகுபலி’யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளன. ஹீரோயினாக தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தீபிகா படுகேனே நடித்த ‘பத்மாவதி’ படம் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.