வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (08:34 IST)

தர்பார் இசை வெளியீடு : மீண்டும் கிளம்பும் டிக்கெட் விலை சர்ச்சை !

தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா டிசம்பர் 7 ஆம் தேதி விற்கப்படும் நிலையில் அதன் டிக்கெட் விலைப் பற்றிய சர்ச்சைகள் தொடங்க ஆரம்பித்துள்ளன.

ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவெ வெளியான சும்மா கிழி பாடலுடன், கண்ணழகி, ஷோ தெ தர்பார் மற்றும் நீதி ஆகிய 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு தலைவர் தீம் எனப்படும் 43 வினாடி கொண்ட இசைத்துணுக்கும் இடம்பெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக நடக்கும் இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் ரசிகர்களுக்கு டிக்கெட்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதற்கான டிக்கெட் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படியும் 3000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பிகில் படத்தின் ஆடியோ ரிலிஸின் போது ரசிகர்களிடம் அதிக விலைக்கு டிக்கெட் விற்று அதனால் ரசிகர்கள் ஏமாந்த அவலம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.