திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:59 IST)

’தலைவர் 168’ படத்தில் நாயகி ஒப்பந்தம்: யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ படத்தை சிறுத்தை சிவா இயக்கும் உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வை அவர் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த நிலையில் இந்த படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம். தற்போது இந்த படத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ரஜினிகாந்த் ஜோடியாக ’எஜமான்’ மற்றும் ’வீரா’ ஆகிய இரண்டு படங்களில் மீனா நடித்துள்ளார் என்பதும் அதற்கு முன்னர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ’அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ரஜினி-மீனா முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப்பெரிய வசூலை குவித்தது என்பதும் இந்த படத்தின் வசூலை பாகுபலி வசூல் கூட முறியடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தலைவர் 168 படத்தில் மீனா நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் குஷ்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் குறித்த ஒப்பந்தம் தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது