பிரபுதேவா படத்தில் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்!
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார்.
நடிகரும் இயக்குனரும் பிரபுதேவா தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிப்பில் முடிந்த பல படங்கள் ரிலிஸாகாமல் உள்ளன. இந்நிலையில் இப்போது புதிதாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஹரஹர மகாதேவி மற்றும் கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.