ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:26 IST)

வனிதாவின் முன்னாள் கணவர் வீட்டில் நடந்த திருட்டு! வெளியான சிசிடிவி காட்சி!

நடிகை வனிதாவின் முன்னாள் கணவரும் நடன இயக்குனருமான ராபர்ட்டின் வீட்டில் சைக்கிள் திருடு போகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிம்புவின் நண்பராக அறியப்படும் நடன  இயக்குனர் ராபர்ட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் நடன இயக்குனராக மாறிய அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின் விஜயகுமாரின் மகள் வனிதாவை திருமணம் செய்து அது சம்மந்தமான சர்ச்சைகளில் சிக்கி பின்னர் அவரை பிரிந்தார்.

இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில் தனது வீட்டின் கேட் கதவை திறந்து சிறுவன் ஒருவன் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராவில் அந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.