1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:50 IST)

சிவி குமாரின் ‘டைட்டானிக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார் தயாரிப்பில் உருவான டைட்டானிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அட்டகத்தி உள்பட பல படங்களை தயாரித்தவரும் ஒரு சில படங்களை இயக்கி வருமான சிவி குமார் நடிப்பில் உருவான திரைப்படம் டைட்டானிக் 
 
ஜானகிராமன் என்பவர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி, காயத்ரி, காளி வெங்கட், மதுமிதா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில், பாலு ஒளிப்பதிவில், ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பில்  இந்தப் படம் உருவாகியுள்ளது