’’விஜய்65’’ பட நடிகையின் கொரொனா ரிப்போர்ட்
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மே மாதம் 2-வது வாரம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நாயகி பூஜா ஹெக்டே குறித்த காட்சிகள் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் 'தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனை பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
விஜய் பட நாயகியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையுமான பூஜா ஹெக்டேவுக்கு கொரொனா தொற்று சினிமாத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரவேண்டுமென எல்லோரும் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கொரொனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களும், விஜய்65 படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.