நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி...ரசிகர்கள், அதிர்ச்சி... ராதிகா, வரலட்சுமி டுவீட்
உலக அளவில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்தாலும் இன்னும் இத்தொற்றின் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. நாள்தோறும் உயிரிழப்புகளும், தொற்றில் அறிகுறிகளும் இருந்துகொண்டேதான் உள்ளது.
இந்நிலையில் இத்தொற்று சாமானியர் முதற்கொண்டு, நடிகர்,செல்வந்தர் என அனைவருக்கும் வருவதால் அரசு கூறியுள்ளதன்படி நடந்துகொண்டால் தொற்றிலிருந்து விடுபடலாம். அரசும் இத்தொற்றைக் குறைக்கப் பல்வேறு நடவடிகைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் இன்று சமத்துவ மக்கள் கட்சியில் தலைவரும் வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.