“இது பிக்பாஸ் சீசன் 7… உள்ள போறது ஏழரை “ – நுழையும்போதே அலப்பறை கெளப்பிய கூல் சுரேஷ்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபமாக அதிகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக பலரின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
இதில் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக சமீபத்தைய பிரபலம் நடிகரும் யுட்யூப் விமர்சகருமான கூல் சுரேஷும் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார். கமலுடன் மேடைக்கு வந்த அவர் “வெந்து தணிந்தது காடு… கமல் சாருக்கு வணக்கத்த போடு” என தன் ஸ்டைலில் கோஷமிட்டார்.
பின்னர் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் “இது பிக்பாஸ் சீசன் 7… உள்ள போறது ஏழரை” என தன்னைத் தானே கேலி பேசிக்கொண்டு சென்றார்.