ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. ஆனால் அதற்கு முன்பாகவே அவரை துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
தெலுங்கில் வெளியான பெள்ளி சூப்ளு திரைப்படம்தான் ரித்துவுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் ரீத்து நடித்திருந்த “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி” குறும்படமும் இடம்பெற்றிருந்தது.
இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் ரித்து வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.