வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (19:42 IST)

குக் வித் கோமாளி’ தர்ஷாவின் அடுத்த படம்: இரண்டு ஹீரோக்கள் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தர்ஷா குப்தா என்பதும் அவர் சமீபத்தில் ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தர்ஷா குப்தா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தர்ஷா குப்தா இந்த படத்தில் ’அங்காடி தெரு’ மகேஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்பதும் இந்த படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் படக்குழுவினர்கள் அறிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்