புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (11:13 IST)

விஷாலுக்கு போட்டியாக களம் இறங்கிய வரலட்சுமி!

நடிகர் விஷால் சன் டிவியில் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவருடைய தோழியான வரலட்சுமி சரத்குமார் ஜெயா டிவியில் சமூக மாற்றத்துக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்.
நடிகர் விஷால் சன் டிவியில் "சன் நாம் ஒருவர்" என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் ஞாயிறுதோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
 
விஷாலை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் "உன்னை அறிந்தால்" என்ற  நிகழ்ச்சியை வரலட்சுமி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் வரும் 14ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாக  உள்ளது.
 
வரலட்சுமி சரத்குமார் அவர் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மத்தவங்க இந்த சமூகத்துக்கு என்ன செய்றாங்கன்னு  முக்கியமில்லை, நாம என்ன செய்றோம், அதான் முக்கியம்!! வாங்க மாறலாம், நம்ம கூட இந்த உலகமும் மாறும்... #உன்னைஅறிந்தால். சமூக மாற்றத்திற்கான  முதல் படி.. என்கிறார்.