நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் காரணமாகவும் மாரடைப்பு காரணமாகவும் பல திரையுலக பிரபலங்கள் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் நெல்லை சிவா நெல்லையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தெரிகிறது. இதனை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நெல்லை சிவா அதன் பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார்
நெல்லை தமிழில் பேசும் அவரது நகைச்சுவை ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை சிவாவின் மறைவு தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர்