1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:12 IST)

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்; திரையுலகினர் இரங்கல்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் சற்றுமுன்னர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் என்ற திரைப்படத்தை இயக்கியவர் கே வி ஆனந்த் அதற்கு முன்னர் தனுஷ் நடித்த அனேகன், சூர்யா நடித்த அயன் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் அவர் பல திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கேவி ஆனந்த் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 54. கேவி ஆனந்த் அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்